Freelancer / 2025 நவம்பர் 18 , மு.ப. 07:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கு 500 சதவீத மேலதிக வரியை விதிக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் மூன்றாண்டுகளைக் கடந்தும் தொடர்கிறது. இந்தப் போரை நிறுத்த பல்வேறு முயற்சிகளை உலக நாடுகள் எடுத்தும், அதற்கான பலன் இதுவரை கிடைக்கவில்லை.
இந்த நிலையில், ரஷ்யாவுக்கு எதிரான மிகக் கடுமையான சட்டமூலத்தை, சில செனட் சபை உறுப்பினர்கள் உருவாக்கியுள்ளதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சட்டமூலத்தில், ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகள் மீது, 500 சதவீத கூடுதல் இறக்குமதி வரியை விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். (a)
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago