Editorial / 2019 ஜூலை 29 , பி.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேர் விடுதலை தொடர்பில் இந்திய மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் திருமாவளவன், அற்புதம்மாள் கோரிக்கை மனு அளித்து வலியுறுத்தியுள்ளனர்.
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டு 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
கடந்த 2018ஆம் ஆண்டு 7 பேரையும் விடுதலை செய்ய முடிவு செய்து தமிழக அமைச்சரவை, ஆளுநருக்கு பரிந்துரை செய்தது.
ஆனால், அந்த பரிந்துரையின் மீது ஆளுநர் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.
இந்த விவகாரத்தில் ஆளுநர் தாமதிக்காமல் 7 பேரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் தலைவர்களும் குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் 7 பேர் விடுதலை தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் இன்று பிற்பகல் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசினார்.
அவருடன் ரவிக்குமார் எம்.பி., பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் ஆகியோர் உடன் இருந்தனர்.
25 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago