2025 மே 16, வெள்ளிக்கிழமை

74 நாட்கள் நீருக்கடியில் வாழ்ந்து சாதனை

Ilango Bharathy   / 2023 மே 15 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

74 நாட்கள் நீருக்கடியில் வாழ்ந்து அமெரிக்காவின் ஃபுளோரிடாவை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர் ஒருவர்  சாதனை படைத்துள்ளார்.

ஜோசஃப் டிடுரி என்ற அந்த ஆராய்ச்சியாளர், ஆழ்கடலில் முழுமையாக அடைக்கப்பட்ட அறை போன்ற வசிப்பிடத்தில், தினசரி நடவடிக்கைகளை மேற்கொண்டு வாழ்ந்து வந்துள்ளார்.

நீருக்கடியில் தீவிர அழுத்தத்தில் வாழும் இந்த பரிசோதனை, எதிர்கால ஆழ்கடல் பணிகளுக்கு உதவியாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

 மருத்துவம் மற்றும் நீர்வாழ் ஆராய்ச்சியை ஒருங்கிணைத்து மாணவர்களுக்கு கற்பிப்பதே இந்த பரிசோதனையின் குறிக்கோள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து 74 நாட்கள் நீருக்கடியில் இருந்துவரும் அவர், 100 நாட்களை இலக்காகக்  கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .