Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2023 டிசெம்பர் 03 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
நம் முன்னோர்கள் நான்கு, ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொண்டு வலுவான தலைமுறையைச் சேர்ந்த குடும்பங்களை உருவாக்குவது என்பது பாரம்பரிய வழக்கமாக இருந்தது. எங்கள் பாட்டி வம்சத்தில் ஏழு,எட்டு அல்லது அதற்கும் மேற்பட்ட குழந்தையை பெற்று வளர்த்துள்ளனர்.
இந்த மரபைநினைவில் கொண்டு இன்றைய இளம் தலைமுறை பெண்களும் 8 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்று குறைந்து வரும் ரஷ்ய மக்கள் தொகையை அதிகரிக்க தங்களது பங்களிப்பினை வழங்க வேண்டும். என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் அறிவுறுத்தியுள்ளார்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற உலக ரஷ்ய மக்கள் கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ரஷ்ய ஜனாதிபதி புட்டின் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
கடந்த 1999-ம் ஆண்டு முதலே ரஷ்யாவின் மக்கள் தொகை குறைந்து வருகிறது. இந்நிலையில், உக்ரேன் போரில் 3 இலட்சம் ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் மக்கள் தொகையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ரஷ்ய ஜனாதிபதி இவ்வாறு பேசியுள்ளதாக கூறப்படுகிறது.
24 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
30 minute ago