2025 நவம்பர் 05, புதன்கிழமை

அ.தி.மு.க மீதான கருத்துக் கணிப்பு கருத்துத் திணிப்பு என்கிறார் எடப்பாடி

Editorial   / 2019 மே 21 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகத்தில், அ.தி.மு.க குறைந்த இடங்களையே பிடிக்கும் என்று வெளியான கணிப்பு, கருத்து கணிப்பு அல்ல என்றும் அது, கருத்துத் திணிப்பு என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும், நேற்று முனத்தினத்துடன் முடிவடைந்தத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன. இதில், அ.தி.மு.க, பெருவாரியான இடங்களை இழந்து, பெரும் பின்னடைவைச் சந்திக்கும் எனத் தெரிவிக்கப்படுவதோடு, தி.மு.க கூட்டணியே, அதிக இடங்களை வெல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், சேலம் விமான நிலையத்தில் வைத்து கருத்துத் ​தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 2016இல், தான் தோல்வியடையப் போவதாக வெளியான கருத்துக்கணிப்புகள் பொய்யானது என்றும் அ.தி.மு.க மாநில கட்சி, தேசியக் கட்சி அல்லது என்றும், அவர் கூறியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X