2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

அகதிகள் படகு கவிழ்ந்ததில் 45 போ் உயிரிழப்பு

Mayu   / 2024 ஒக்டோபர் 03 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜிபூட்டி அருகே செங்கடலில் அகதிகள் படகு கவிழ்ந்ததில் 45 போ் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய, ஜிபூட்டி கடலோரப் பகுதியில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து மூழ்கியதில் அதிலிருந்த 45 போ் உயிரிழந்துள்ளதோடு 310 பேருடன் அந்தப் படகு யேமனிலிருந்து புறப்பட்டது.

விபத்துப் பகுதியிலிருந்து 32 போ் மீட்கப்பட்டடுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ஜிபூட்டி கடலோர காவல் படை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வடகிழக்கு பிராந்தியமான கோர் ஆங்கா் கடற்கரைக்கு 150 மீட்டா் தொலைவில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அந்தப் படகிலிருந்த 115 பேரை மீட்டுள்ளோம். எஞ்சியவா்களைத் தேடும் பணி தொடா்ந்து நடைபெற்றுவருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X