Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 பெப்ரவரி 16 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
அடுத்த பிரிக்ஸ் உச்சிமாநாடு, ஜூலை 6,7ஆம் திகதிகளில் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் என்று, பிரேசில் அறிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டு வரை, வளரும் பொருளாதாரங்களின் கூட்டமைப்பிற்கு பிரேசில் தலைமை தாங்குகிறது.
மேலும், உலகளாவிய தெற்கு நாடுகளிடையே உலகளாவிய நிர்வாக சீர்திருத்தம் மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டு பிரிக்ஸ் அமைப்பு பிரேசில், ரஷியா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளால் இணைந்து நிறுவப்பட்டது. பிறகு, 2010ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா இந்த அமைப்பில் இணைந்தது.
கடந்த ஆண்டு, ஈரான், எகிப்து, எத்தியோப்பியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றைச் சேர்ப்பதன் மூலம் இந்த கூட்டமைப்பு விரிவடைந்தது. சவூதி அரேபியாவும் இந்த அமைப்பில் இணைவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர துருக்கி, அஜர்பைஜான் மற்றும் மலேசியா முறையாக உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளன.
49 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
1 hours ago
1 hours ago