2026 மே 14, வியாழக்கிழமை

அடுத்த வியாழன் முதல் முகக்கவசம் அணியத் தேவையில்லை

Ilango Bharathy   / 2022 ஜனவரி 20 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்த வியாழக்கிழமை முதல் பிரித்தானியாவில் முக கவசம் அணிய விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்  நீக்கப்படுவதாக அந்நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”வீட்டில் இருந்தவாறு பணியுரியுமாறு ஊழியர்களை இனி அரசு அறிவுறுத்தாது என்றும் அவரவர் அலுவலகம் சென்று பணிபுரிய அனுமதி வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் சுய தனிமைப்படுத்தல், கொரோனா ஹெல்த் பாஸ் உள்ளிட்ட நடவடிக்கைகளில் இருந்து மக்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாவும், வரும் வாரம் முதல் பொது இடங்கள் மற்றும் உள்ளரங்கு நிகழ்ச்சிகளில் மக்கள் முக கவசம் அணிவது கட்டாயமில்லை என்றும் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .