Ilango Bharathy / 2022 மார்ச் 13 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
நேட்டோ அமைப்பில் உக்ரேன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 17 ஆவது நாளாகத் தீவிரமாகத் தாக்குதல் நடத்தி வருகிறது.
உக்ரேனும் தம்மை தற்காத்துக் கொள்ள ரஷ்ய படைகள் மீது பதில் தாக்குதல் நடத்தி வருகின்றது.

இதனையடுத்து உக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்கா,பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகள் ரஷ்யா மீது பல தடைகளை விதித்து வருகின்றன.
அந்தவகையில் தற்போது ரஷ்யா மற்றும் ரஷ்யாவின் நட்பு நாடாகக் கருதப்படும் பெலாரஸிற்கும் ஆடம்பரப் பொருட்களின் ஏற்றுமதியைத் தடை செய்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க வர்த்தக துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘குறிப்பிட்ட சில மதுபானங்கள் புகையிலை பொருட்கள்,ஆடைகள், நகைகள், வாகனங்கள் மற்றும் பழங்கால பொருட்கள் போன்ற ஆடம்பரப்பொருட்கள் ஏற்றுமதி மற்றும் பரிமாற்றத்திற்கு தடை விதிக்கப்படும் ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
3 hours ago
7 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago
9 hours ago