2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட எலான்; மகிழ்ச்சியில் காற்பந்து ரசிகர்கள்

Ilango Bharathy   / 2022 ஓகஸ்ட் 18 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
உலக பணக்காரர்களில் ஒருவரும்  டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் ஸ்தாபகரும், அதன்  தலைமை நிர்வாக அதிகாரியுமான எலோன் மஸ்க் (Elon musk) அண்மையில் பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினார்.

இது உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் எலான் மஸ்க்,  உலகின் தலைசிறந்த கால்பந்து கிளப் அணிகளில்  ஒன்றான மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்கப்போவதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளமை உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த அணியில் பிரபல நட்சத்திர காற்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X