2025 ஜூலை 14, திங்கட்கிழமை

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கேட்பரி; அதிர்ச்சியில் மக்கள்

Ilango Bharathy   / 2023 மே 04 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியாவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற சொக்லெட் நிறுவனமான கேட்பரி, பக்டீரியா தொற்று அச்சுறுத்தல் காரணமாக பிரித்தானியாமுழுவதும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள 6 சொக்லெட் வகைகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

லிஸ்டீரியோ தொற்று எனப்படும் உணவு மூலம் பரவும் பாக்டீரியா, அசுத்தமான உணவை உட்கொள்வதால் ஏற்படுகிறது. கர்ப்பிணிகள், 65 வயதுக்கு மேற்பட்டோர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டால் மிகவும் ஆபத்து என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கேட்பரியின் தயாரிப்புகளில் லிஸ்டீரியோ தொற்றுப் பரவும்  அபாயம் ஏற்பட்டதால், ஆறு சொக்லெட் வகைகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

மேலும் யார் வாங்கியிருந்தாலும் அதனை உட்கொள்ளாமல் வாங்கிய இடத்திலே ஒப்படைத்து மீண்டும் பணம் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .