Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Ilango Bharathy / 2022 மார்ச் 30 , மு.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
அடுத்த வாரம் புரஸ்செல்ஸில் (Brussels )நடைபெற உள்ள நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்க உக்ரேனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் மாதம் 6, 7ஆம் திகதிகளில் நேட்டோ பொதுச்செயலாளர் Jens Stoltenberg, தலைமையில் நேட்டோ உச்சி மாநாடு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அவுஸ்திரேலியா, பின்லாந்து, ஜார்ஜியா, ஜப்பான், நியூசிலாந்து, சுவீடன், கொரியா குடியரசு ஆகிய நாடுகளும் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளது.
உக்ரேன் மீதான ரஷ்யாவின் போர் தொடங்கியதில் இருந்து 30 நேட்டோ நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களால் கூட்டம் கூட்டப்படுவது இது 2 ஆவது முறையாகும்.
சில அமைச்சர்கள் வீடியோ இணைப்பு மூலம் கலந்து கொள்வார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago