2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

அந்தமான் - நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Freelancer   / 2025 ஜூலை 29 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

வங்கக்கடலில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் இன்று (29) அதிகாலை 6.3 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கத்தின் மையம் கடலுக்கு அடியே 10 கி.மீ ஆழத்தில், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே அமைந்திருந்தது. 

இந்த நிலநடுக்கத்தால் இதுவரை எவ்வித சேதமோ அல்லது உயிரிழப்போ பதிவாகவில்லை. மேலும், தற்போது வரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .