Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2021 டிசெம்பர் 23 , பி.ப. 01:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
நபரொருவர் தனது அந்தரங்க உறுப்பில் 278 துளைகளைப் போட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள விடயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
61 வயதான ரோல்ஃப் பச்சோல்ஸ் (Rolf Buchholz) என்பவரே இச்செயலில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியைச் சேர்ந்த இவர் இதற்கு முன்னர் உடலில் பல துளைகளைப் போட்டு அதில் ஆபரணம் அணிந்து கொண்டமைக்காகக் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இது குறித்து அவர் பிரபல ஊடகமொன்றிற்கு அளித்த செவ்வியில் ”எனக்கு 40 வயதான போதே எனது உடலில் மாற்றங்களை செய்துகொள்ள விரும்பினேன். இதனால் 90% உடல் முழுவதும் பச்சைக்குத்திக் கொண்டுள்ளதோடு, மேலும் உடலில் ஆங்காங்கே துளைகளை இட்டு அதில் உலோகத்தாலான ஆபரணங்களை அணிய ஆரம்பித்தேன்.
அதுமட்டுமில்லாது உதட்டில் மாத்திரம் 94 துளைகளையும் எனது ஆணுறுப்பில் 278 துளைகளையும் போட்டுள்ளேன்.
இதனால் தன்னுடைய அந்தரங்க வாழ்க்கைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. என்னுடைய உடலில் இருக்கும் மாற்றங்கள் அனைத்தும் வெளியில் மட்டும்தான். இது எந்த விதத்திலும் என்னுடைய பாலியல் வாழ்க்கையைப் பாதிக்கவில்லை” என்றார்.
அவரது கருத்து பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
7 minute ago
8 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
8 minute ago
44 minute ago