2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

அன்வர் இப்ராஹிம் விடுதலை; 2 வருடங்களில் பிரதமர் பதவி

Editorial   / 2018 மே 16 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறைவாசம் அனுபவித்து வந்த, மலேசிய அரசியல் தலைவரான அன்வர் இப்ராஹிம் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஆளுமைமிக்க எதிர்கால தலைவராக அறியப்பட்ட அவர், பாலியல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அன்வர் இப்ராஹிமுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு, மலேசிய பிரதமர் மஹதிர் மொஹமட் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மலேசியாவின் புதிய பிரதமராக, பதவியேற்றுள்ள அந்நாட்டு மஹதீர் மொஹமட், இரண்டு வருட காலத்திற்குள் பிரதமர் பதவியை அன்வர் இப்ராஹிமிற்கு கையளிப்பதாக உறுதியளித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த தேர்தலில், ஆறு தசாப்தங்களாக அதிகாரத்தில் இருந்த  பிஎன் கட்சியை, அன்வர் இப்ராஹிம் தலைமையிலான, எதிர்கட்சி  கூட்டணி தோற்கடித்தது.

20 ஆண்டுகளுக்கு முன்னர் மஹதீர் மொஹமட்,  முதல்முறையாகப் பிரதமர் பதவியில் இருந்தபோது, அன்வர் இப்ராஹிமை பதவிநீக்கம் செய்து சிறையில் அடைத்தார். எனினும், சமீபத்திய தேர்தல் வெற்றிக்கு பிறகு இருவருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டுள்ளது.

அன்வருக்கு இப்ராஹிமிக்கு பொது மன்னிப்பு வழங்குதல் மற்றும் இரண்டு வருடங்களுக்குள் பிரதமர் பதவியை அவரிடம் கையளித்தல் ஆகிய இரு நிபந்தனைகளுக்கு மஹதீர் மொஹமட், ஒப்புக்கொண்டதை அடுத்து, எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு அவர் தலைமை தாங்க அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X