Freelancer / 2025 நவம்பர் 10 , மு.ப. 08:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவிற்கான முக்கிய உலோகங்கள் மீதான ஏற்றுமதி தடையை சீனா தற்காலிகமாக நீக்கியுள்ளது.
சீனாவின் வர்த்தக அமைச்சகம், 2024 இல் அறிவித்திருந்த முக்கிய உலோகங்களான கலியம், ஜெர்மேனியம், அன்டிமனி மற்றும் சூப்பர்-ஹார்ட் பொருள்களின் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி தடையை 2025 நவம்பர் 9 முதல் 2026 நவம்பர் 27 வரை தற்காலிகமாக நீக்கியுள்ளது.
இந்த நடவடிக்கை, 2026 ஆம் ஆண்டை முன்னிட்டு சீனா-அமெரிக்கா இடையேயான வர்த்தக பதற்றங்களை குறைக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இரட்டை பயன்பாட்டுக்குரிய கிராஃபைட் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட கடுமையான சரிபார்ப்பு நடைமுறைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
இதனுடன், ஒக்டோபர் 9 இல் அறிவிக்கப்பட்ட சில அரிய பூமி உலோகங்கள் மற்றும் லித்தியம் பேட்டரி பொருள்கள் மீதான கட்டுப்பாடுகளும் சீன அரசு தற்காலிகமாக நீக்கியுள்ளது.
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இடையேயான சமீபத்திய ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. (a)
15 minute ago
32 minute ago
41 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
32 minute ago
41 minute ago
2 hours ago