Editorial / 2020 ஜனவரி 15 , பி.ப. 06:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாக்தாத்
ஈராக் தலைநகர் பாக்தாத்திலுள்ள சர்வதேச விமான நிலையம் அருகே கடந்த 3ஆம் திகதி அமெரிக்க இராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் ஈரானின் இராணுவத் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.
ஜனாதிபதி டிரம்பின் உத்தரவின் பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க இராணுவம் கூறியது.
இந்த தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்க இராணுவத்தை வெளியேறுமாறு ஈராக் நாடாளுமன்றம் கேட்டு கொண்டு ள்ளது.
ஈராக் நாடாளுமன்றம் ஜனவரி 5ஆம் திகதி வாக்களிப்பு மூலம் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியது.
2014 முதல் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக போரிட அமெரிக்கா அங்கு முகாமிட்டது. அங்கு சுமார் 5200 அமெரிக்க இராணுவ வீரர்கள் உள்ளனர்.
அமெரிக்கப் படைகளின் மீதான அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், நேற்றுமுன்தினம் இரவு கத்யுஷா ரொக்கெட்டுக்கள் பாக்தாத்துக்கு வடக்கே ஈராக்கிய விமானத் தளத்தை குறிவைத்து தாக்கின.
அங்கு அமெரிக்கத் தலைமையிலான கூட்டணிப் படைகள் முகாமிட்டு உள்ளன.
இந்த நிலையில் அமெரிக்க இராணுவத்தை வெளியேற வலியுறுத்தி ஈராக் தலைவர் மொக்தாதா சதர் அமெரிக்க இராணுவத்துக்கு எதிராக மிகப்பெரிய பேரணி நடத்த மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஈராக்கின் வானம், நிலம் மற்றும் இறையாண்மை ஆகியவை ஒவ்வொரு நாளும் படைகளை ஆக்கிரமிப்பின் மூலம் மீறப்படுகின்றன என கூறி உள்ளார்.
18 minute ago
43 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
43 minute ago
49 minute ago