2025 மே 20, செவ்வாய்க்கிழமை

அமெரிக்க உயர்நீதிமன்றில் முதல் கறுப்பின பெண் நீதிபதி

Freelancer   / 2022 மார்ச் 21 , பி.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க உயர்நீதிமன்றத்தில் முதன்முறையாக கறுப்பின பெண் ஒருவர் நீதிபதியாகப் பொறுப்பேற்றகவுள்ளார்.

கறுப்பின பெண்ணான கேடான்ஜி பிரவுன் ஜக்சன் என்பவரை, புதிய நீதிபதியாக நியமிக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அனுமதி வழங்கினார்.

அவருடைய  அனுமதிக்குப் பின்னர் அமெரிக்க செனட் உறுப்பினர்கள் வாக்கெடுப்பு நடத்தி அதன்பின் தான் அவர் நீதிபதியாக தெரிவுசெய்யப்படவுள்ளார்.

இந்நிலையில், கறுப்பின பெண்ணை நீதிபதியாக நியமிப்பதற்கான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது.

100 உறுப்பினர்களைக் கொண்ட அமெரிக்க செனட் சபையில், ஜனநாயகக் கட்சியினருக்கும் குடியரசுக் கட்சியினருக்கும் இடையே 50-50 என சமமாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

ஜக்சனை நீதிபதியாக நியமிக்க தொடக்கத்திலிருந்தே ஜனநாயகக் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X