Lenin Raj / 2026 ஏப்ரல் 29 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

"Freedom 250" என்ற பெயரில், அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினம் எதிர்வரும் ஜூலை 4-ஆம் தேதி கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டுச் சிறப்பு நாணயங்கள், அஞ்சல் தலைகள் (முத்திரைகள்) மற்றும் இராணுவ அணிவகுப்புகள் போன்ற பிரம்மாண்ட நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக, சுதந்திரம் பெற்றதில் இருந்து இதுவரை அமெரிக்கா அடைந்துள்ள முன்னேற்றம், ஜனநாயக மதிப்புகள் மற்றும் எதிர்கால இலக்குகள் போன்றவற்றை முன்னிலைப்படுத்துவதே இந்த விழாவின் நோக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அதிபர் ட்ரம்ப்பின் புகைப்படம் மற்றும் அவரது கையெழுத்துடன் கூடிய சிறப்பு கடவுச்சீட்டுகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இவை வரையறுக்கப்பட்ட பதிப்பு (Limited Edition) முறையில் வெளியிடப்படும் என்றும், வாஷிங்டன் கடவுச்சீட்டு ஏஜென்சியில் (Washington Passport Agency) மட்டுமே இவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதிய 100 டொலர் நாணயத்தாள்களில் அதிபர் ட்ரம்ப்பின் கையெழுத்து இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
1 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago