2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

அமெரிக்க யுவதி மீது கூட்டுப் பாலியல் வன்புணர்பு

Ilango Bharathy   / 2022 ஜூலை 22 , பி.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}



 பாகிஸ்தானைச் சேர்ந்த இருவரால் அமெரிக்க யுவதியொருவர்  கூட்டுப்  பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

21 வயதான குறித்த யுவதி  இணையதளம் மூலமாக பாகிஸ்தானைச் சேர்ந்த முஸ்மல் சிப்ரா என்பவருடன் பழகி வந்துள்ளார்.

இந்நிலையில் இவருடைய அழைப்பின் பேரில் அவ் யுவதி அமெரிக்காவிலிருந்து கராச்சிக்கு வந்துள்ளார்.

 அங்கிருந்து அவரை முஸ்மல் சிப்ரா மற்றும் அவருடைய நண்பர் அசாம் கோசா கான் மாவட்டத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு  அவரை முஸ்பல் சிப்ரா மற்றும் அசாம் கோசா ஆகிய 2 பேரும் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதோடு அவற்றை வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு வெளியில் சொன்னால் வீடியோவை ஊடகத்தில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டிச் சென்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இளம்பெண் தனக்கு நடந்த கொடுமைகளை வீடியோ பதிவின் மூலம் பேசி வெளியிட்டுள்ளார்.
இதனையடுத்து பொலிஸார்  குறித்த இருவரையும்
கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X