2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

அமெரிக்காவின் தேசிய பறவை வெண்தலைக் கழுகு

Mayu   / 2024 டிசெம்பர் 26 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் தேசிய பறவை கழுகு என தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் கையொப்பமிட்டு உறுதி செய்துள்ள நிலையில், அடுத்த மாதம் டிரம்ப் ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்  இதை மாற்றுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமெரிக்காவில் வெண்தலை கழுகு, கடந்த 1782 ஆம் ஆண்டு அமெரிக்க அரசு முத்திரையில் இடம்பெற்று இருந்த நிலையில், அனைத்து அமெரிக்க அரசு ஆவணங்களிலும் இந்த சின்னம் பொறிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த 240 ஆண்டுகளுக்கு மேலாக வெண்தலை கழுகு அமெரிக்க அரசின் அதிகார சின்னமாக இருந்து வந்துள்ளது.

இந்த கழுகு தான் அமெரிக்காவின் தேசிய பறவை என்று பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் உண்மையில் இதுவரை அமெரிக்காவின் தேசிய பறவையாக அது அதிகாரபூர்வமாக அரசால் அங்கீகரிக்கப்படவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X