Freelancer / 2026 மார்ச் 13 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இதைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க படைத்தலங்கள் மீது ஈரான் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.
அந்த வகையில், டுபாய் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே நேற்று ட்ரோன்கள் விழுந்ததில் ஒரு இந்தியர், கானா நாட்டைச் சேர்ந்த 2 பேர், பங்களாதேஷை சேர்ந்த ஒருவர் என 4 பேர் காயமடைந்தனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து விமானப் போக்குவரத்து வழக்கம் போல் இயங்கி வருவதாக எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் இராணுவ மையங்கள் மற்றும் அரசு கட்டடங்கள் மீது தாக்குதல் நடத்தி வந்த அமெரிக்க மற்றும் இஸ்ரேல் படைகள், ஈரான் பொருளாதாரத்தை முடக்க டெஹ்ரானின் உள்ள வங்கி ஒன்றின் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் வங்கி ஊழியர்கள் சிலர் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து ஈரான் அரசின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, எங்கள் வங்கி மீது தாக்குதல் நடத்தியற்கு பதிலடியாக, மேற்கு ஆசியாவில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர்புடைய வங்கிகள், பொருளாதார மையங்கள் ஆகியவற்றை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தும் என்றார்.
இதன் காரணமாக சவூதி அரேபியா, டுபாய், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. (a)
3 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago