2025 ஜூலை 14, திங்கட்கிழமை

அரசியல் நெருக்கடி தொடர்ந்தால் பத்திரிகை சுதந்திரம் பாதிக்கப்படும்

Editorial   / 2023 மே 03 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிலவும் அரசியல் முட்டுக்கட்டை குறித்து கவலை தெரிவித்துள்ள பாகிஸ்தான் ஃபெடரல் யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ், (PFUJ) , முதிர்ச்சியை வெளிப்படுத்தவும், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளை தீர்க்கவும் அனைத்து பங்குதாரர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

அதன் பெடரல் எக்ஸிகியூட்டிவ் கவுன்சிலின் மூன்று நாள் கூட்டத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட ஓர் அறிவிப்பில், PFUJ இன் அப்சல் பட் குழு, தற்போதைய சூழ்நிலையை சுமுகமாக தீர்க்காவிட்டால் பத்திரிகை சுதந்திரம் முதல் பலியாகும் என்று கூறியது.

இத்தகைய மோதல்கள் சர்வாதிகார ஆட்சிகளை விளைவித்ததால், கடந்த காலத்திலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ளுமாறு பங்குதாரர்களை அது வலியுறுத்தியது. "நிலவும் அரசியல் ஸ்திரமின்மை காரணமாக நாடு மேலும் பொருளாதார சீரழிவை தாங்க முடியாது" என்று PFUJ எச்சரித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .