2026 ஜனவரி 25, ஞாயிற்றுக்கிழமை

அவுஸ்திரேலியாவில் சுறா தாக்குதல் அதிகரிப்பு

Editorial   / 2026 ஜனவரி 25 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனவரி 19ஆம் திகதியிலிருந்து 48 மணி நேரத்திற்குள் சுறா தாக்குதலில் நால்வர் பாதிக்கப்பட்டனர். சிட்னி (Sydney) கடற்கரைகளில் மூன்று சம்பவங்கள் நடந்தன.

பாதிக்கப்பட்டவர்களின் காயத்தைப் பார்க்கும்போது அவர்களைப் புல் (Bull) சுறா தாக்கியிருக்கக்கூடும் என்கின்றனர் நிபுணர்கள்.

புல் சுறாவின் ஆயுள்காலம் அதிகபட்சம் 50 ஆண்டுகள். நீரின் வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸுக்கு அதிகமாக இருந்தால் அது புல் சுறாவுக்கு ஏதுவானது. ஒக்டோபர் மாதத்தில் புல் சுறாக்கள் சிட்னி சென்றடைகின்றன.

ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் அவற்றின் எண்ணிக்கை உச்சம் தொடும். ஏப்ரல் அல்லது மே மாத வாக்கில் சுறாக்கள் குயின்ஸ்லந்தை (Queensland) நோக்கிச் செல்வது வழக்கம்.

மற்ற சுறா மீன்களைக் காட்டிலும் புல் சுறா மூர்க்கமானது என்பதற்கு ஆதாரம் இல்லை.

அடைமழையால் சில நீர் நிலைகள் கலங்கலாகும். மீன்கள் நீந்தித் திரிவதால் புல் சுறாக்கள் அங்கு இரை தேடுவதுண்டு. கலங்கிய தண்ணீர் சுறாக்களுக்கு இடையூறு அல்ல.

சுறாக்கள் அவ்வாறு இரை தேடும்போது மனிதர்கள் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். குறுகிய காலத்தில் சில தாக்குதல் நடந்ததால் மக்கள் அதிகம் அஞ்சுகிறார்கள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆனால் சுறா தாக்குதல் அபாயம் நாம் நினைப்பதைக் காட்டிலும் குறைவே என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X