Freelancer / 2024 டிசெம்பர் 23 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாராளுமன்றத்தில், பெண் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் புகைபிடிக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
கொலம்பியாவை சேர்ந்தவர் கேத்தி ஜூவினோ என்பவர், அந்த நாட்டின் முக்கிய தேசிய கட்சிகளில் ஒன்றான கிரீன் கட்சியை சேர்ந்தவர் ஆவார். இவர், கடந்த 2022ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வென்று எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்தநிலையில் தலைநகர் பகோடாவில் உள்ள அந்த நாட்டின் பாராளுமன்ற அவையில், பொது சுகாதாரம் தொடர்பான பிரேரணைக்கான விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில், கேத்தி ஜூவினோவும் கலந்துகொண்டிருந்தார்.
அப்போது கேத்தி, தான் கைகளில் மறைத்து வைத்திருந்த இ-சிகரெட்டை கொண்டு புகைபிடித்தார்.
இது அங்கு பொருத்தப்பட்டிருந்த கமெராவில் பதிவானநிலையில் சமூக வலைத்ததளத்தில் பதிவிடப்பட்டது.
தொடர்ந்து அந்த வீடியோ காட்டுத்தீ போல பரவி ஒரே நாளில் வைரலானது. இதனை தொடர்ந்து கேத்தி ஜூவினோ தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து நாட்டு மக்களிடமும் சபாநாயகரிடமும் மன்னிப்பு கோரினார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago