Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 பெப்ரவரி 06 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
மியான்மரில் சிறை வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகியின் வீட்டை அந்த நாட்டு அரசாங்கம் ஏலம் விட்டது. இருப்பினும் அந்த வீட்டை யாரும் வாங்க முன்வராததால், அந்நாட்டு ஏமாற்றம் அடைந்துள்ளது.
மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக சிறையில் இருந்து போராடியவர் ஆங் சான் சூகி. இதற்காக அமைதிக்கான நோபல் பரிசு பெற்றிருந்தார். இவருடைய தொடர் போராட்டம் காரணமாக அங்கு இராணுவ ஆட்சி கலைக்கப்பட்டது.
தொடர்ந்து, அங்கு 2015ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் ஆங் சான் சூகி வெற்றி பெற்று அந்த நாட்டின் தலைவராக பதவியேற்றார். 2020ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்லில் 81 சதவீத வாக்குகளை பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தார்.
2021ஆம் ஆண்டு, அந்த நாட்டை மீண்டும் இராணுவம் ஆட்சிக்குள் கொண்வரப்பட்டது. இவர் மீது ஊழல் குற்றச்சாட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சிறையில் உள்ள ஆங் சான் சூகியை விடுதலை செய்யக்கோரி அங்கு பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்கள் மீது அந்த நாட்டின் இராணுவம் கோர முகத்தை காட்டி அடக்கி வருகிறது. மியான்மரில் கடுமையான நிதி நெருக்கடி நிலவி வரும் நிலையில், ஆங் சான் சூகிக்கு சொந்தமான சொத்துகளை இராணுவம் விற்று பொருளாதார இழப்பை சரிகட்டி வருகிறது.
இராணுவ நெருக்கடி நிலையின்போது, ஆங் சான் சூகியின் அடைக்கப்பட்டிருந்த வீடு கையகப்படுத்தப்பட்டது. மேலும், அதனை ஏலம் விட இராணுவம் நடவடிக்கை எடுத்தது. ஆனால் ஏலம் விடப்பட்ட அந்த வீட்டை யாரும் வாங்க முன்வரவில்லை.
வரலாற்று சிறப்பு வாய்ந்த நினைவு சின்னமாக கருதப்படும் அந்த குட்டி பங்களா, யங்கூனில் உள்ள இனியே ஏரிக்கரையில் கட்டப்பட்டது. சூகியின் தந்தையும், அந்த நாட்டின் விடுதலை போராட்ட வீரரான இராணுவ தளபதி ஆங் சாங்கும் வசித்து வந்த பூர்வீக வீடாக அது உள்ளது. அந்த வீடுதான் ஆங் சான் சூகி 15 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவைக்கப்பட்டு அறவழியில் போராட வழிவகுத்தது. மேலும் நோபல் பரிசையும் பெற்று தந்தது.
அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி ஒபாமா, ஹிலாரி கிளிண்டன், ஐ.நா சபை முன்னாள் பொதுச்செயலாளர் பான்-கி-மூன் முதலியவர்கள் அந்த வீட்டில் வைத்துதான் ஆங் சான் சூகியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
ஏலம் விடும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. இதனால், மியானரில் ஆளும் இராணுவ அரசுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ஆங் சான் சூகியின் வீட்டை இராணுவத்தால் ஏலம் விட இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
16 minute ago
20 minute ago
32 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
20 minute ago
32 minute ago
2 hours ago