Mithuna / 2024 பெப்ரவரி 06 , பி.ப. 02:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் ரோஸ்வில்லே பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு ஆலிசன் ஸ்கார்டின் என்பவர் கணவருடன் சென்றுள்ளார். 2 மகன்களுக்கு தாயான அவர், ஹோட்டலில் கணவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார்.
இதனால், ஹோட்டல் அறையில் இருந்து வெளியேறி சிறிய, சூடான நீர் நிரம்பிய நீச்சல் குளம் அமைந்த பகுதிக்கு சென்றுள்ளார். அந்த நீச்சல் குளத்தில் கொலராடோ மாகாணத்தில் இருந்து வந்த ஆக்கி விளையாட்டு வீரர்களான சிறுவர்கள் குளித்து கொண்டு இருந்தனர்.
அவர்களிடம் மெல்ல பேசிய ஆலிசன், அவருடைய திருமண வாழ்க்கை மற்றும் அதில் உள்ள சிக்கல்களை பற்றி விரிவாக பேசியிருக்கிறார்.
இதன்பின் அவர்களுடைய அறைகளுக்கு அனைவரும் திரும்பி விட்டனர். இதன்பின்னர் ஸ்நாப்சேட் (snap chat) வழியே சிறுவர்களில் ஒருவரை ஆலிசன் தொடர்பு கொண்டிருக்கிறார். “கணவருடன் சண்டை நடந்து விட்டது. உங்களுடைய அறைக்கு வரலாம் என விரும்புகிறேன்” என அதில் தெரிவித்து இருக்கிறார்.
தொடர்ந்து அவர்களின் அறைக்குள் நுழைந்த ஆலிசன் தொடக்கத்தில் அவர்களின் வயது என்ன? என கேட்டறிந்து கொண்டார். உங்களுக்கு என்னுடைய மகன்களின் வயதுதான் இருக்கும் என கூறியிருக்கிறார். பின்னர், பாலியல் தொடர்பான விடயங்களை பேச தொடங்கியுள்ளார். இதன்பின்பு, அவர்களில் 2 சிறுவர்களுடன் படுக்கைக்கு சென்றிருக்கிறார். அவர்களுடன் தகாத உறவிலும் ஈடுபட்டு உள்ளார்.
இதுபற்றி அந்த 2 சிறுவர்கள் கூறும்போது, “3-வது சிறுவர் பார்த்து கொண்டிருக்கும்போது, எங்களை கட்டாயப்படுத்தி பாலியல் செயல்களில் ஈடுபட்டது போன்று, நெருக்கடியாக நாங்கள் உணர்ந்தோம். கடைசியில், அவரை அறையில் இருந்து வெளியேறும்படி கூறி விட்டோம்” என தெரிவித்தனர்.
இதன்பின்பு, சிறுவர்கள் விளையாடிய ஆக்கி போட்டிகளில் ஒன்றை பார்க்க ஆலிசன் சென்றிருக்கிறார். போட்டியை ரசித்து பார்த்து இருக்கிறார். அவர்கள் எல்லோரும் வீட்டுக்கு சென்ற பின்பு, அந்த 2 சிறுவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி இருக்கிறார்.
கணவருடன் சண்டையிட்டு விட்டு, சிறுவர்களுடன் தகாத உறவை கொண்டதற்காக ஆலிசன் மீது கடுமையான குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து அவரை பொலிஸார் கைது செய்தனர். விசாரணையில், சிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்து கொண்ட நிகழ்வை அவர் ஒப்பு கொண்டார்.
தொடர்ந்து அவர், அவர்களிடம் “காண்டம் கேட்டேன். ஆனால், அதனை பயன்படுத்த விரும்பவில்லை” என்று கூறியிருக்கிறார். அவரை பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளனர்.
7 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
9 hours ago