2025 ஜூலை 14, திங்கட்கிழமை

ஆபாசமாகப் புகைப்படம் எடுத்தால் 3 ஆண்டுகள் சிறை

Ilango Bharathy   / 2023 மே 09 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாலியல் வன்முறை மற்றும் பாலியல் வல்லுறவுக்கு எதிரான நடவடிக்கையை ஜப்பான் அரசு தீவிரப்படுத்தி வருகின்றது.

குறிப்பாக  திருமணத்துக்கான வயதை அதிகரிப்பது, பாலியல் வல்லுறவு பற்றிய வரையறையை மறுசீரமைப்பது, தண்டனையை கடுமையாக்குவது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை அந்நாட்டு அரசு  மேற்கொண்டு வருகின்றது.

அதன் ஒரு பகுதியாக, மற்றவர்களின் முறையான ஒப்புதலின்றி பாலியல் மோகத்துடன் புகைப்படங்கள், வீடியோக்களை எடுக்க தடை விதிக்கும் மசோதாவை ஜப்பான் நாடாளுமன்ற கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் பாலியல் இச்சையைத் தூண்டக்கூடிய வகையில் புகைப்படம் எடுப்பதை இச்சட்டம் தடை செய்கிறது. அத்துடன்  ஒரு பெண் உடை மாற்றும்போதோ அல்லது பாலுறவில் இருக்கும்போதோ அவரை ரகசியமாக படம்பிடிப்பது மற்றும்  அனுமதியின்றி, ஒருவரின் பிறப்புறுப்பை புகைப்படம் எடுப்பது,  அதனை சமூக வலைதளங்களில் வெளியிடுவது ஆகியவற்றை இது தடை செய்கிறது.

 மேலும், ஒரு புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபசமாக மாற்றுவதும் குற்றமாக்க பரிந்துரைக்கிறது. குறிப்பாக, எந்தவித நியாய காரணமின்றி, குழந்தைகளை பாலியல் காரணங்களுக்காக படம் பிடிப்பதை இச்சட்டம் முற்றிலும் தடை செய்கிறது.

 குற்றவாளிகளுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது 3 மில்லியன் ஜப்பானிய யென் (£17,500; $22,000) வரை அபராதம் விதிக்கப்படும்எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .