Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Ilango Bharathy / 2023 மார்ச் 30 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீதிபதியாகப் பணியாற்றி வரும் நபர் ஒருவர் ஆபாச நடிகராகமாறிய அதிர்ச்சிகரமான சம்பவம் நியூயோர்க்கில் இடம்பெற்றுள்ளது.
கிரிகோரி ஏ. லாக் என்ற 33 வயதாக நபரே இவ்வாறு பகலில் நீதிபதியாகவும் , இரவில் ஆபாச நடிகராகவும் பணிபுரிந்து வருகின்றார்.
ஒன்லி பேன்ஸ் என்ற பெயரில் இணையத் தளமொன்றை நடத்திவரும் இவர் அதில் சுமார் 100 க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களை பதிவிட்டுள்ளார் எனவும், இதற்காக மாதம் 12 அமெரிக்க டொலர்களை கட்டணமாக ரசிகர்களிடத்தில் இருந்து அவர் அறவிட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அண்மையில் கிரிகோரி, தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் ” 'நான் ஒரு நீதிபதி' ,காலையில் ஒரு வெள்ளை கொலர் நிபுணர். இரவில் தொழில்சார்ந்தவர்” எனப் பதிவிட்டுள்ளார். மேலும் கிரிகோரி தன் சுயசரிதையில் 'முதிர்ச்சியற்றவர், முரட்டுத்தனமான, ஆபாசமானவன் ' என்று தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில் இவ்விவகாரம் நியூயோர்க் அதிகாரிகளால் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதுகுறித்து நகர கவுன்சில் பெண் விக்கி பலடினோ கூறியதாவது:-இந்த நகரம் அனைத்து மட்டங்களிலும் அதன் நீதிமன்றங்களில் முழுமையான நம்பிக்கையை கொண்டிருக்க வேண்டும். மேலும் லாக் போன்ற நபர்களை சட்ட அதிகார பதவிகளுக்கு நியமிப்பது நீதித்துறையில் பொதுமக்களின் நம்பிக்கையை அழிக்கின்றது என்றும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
9 hours ago
30 Apr 2025