Freelancer / 2024 ஒக்டோபர் 15 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரித்தானிய இராணுவத்துடன் இணைந்து போரிட்ட சில தகுதியுள்ள ஆப்கானிஸ்தான் சிறப்புப் படை வீரர்கள் முன்னர் நிராகரிக்கப்பட்ட பின்னர், தற்போது மீண்டும் இங்கிலாந்தில் மீள்குடியேற அனுமதிப்பதாக அரசாங்கம் கூறியுள்ளது..
முந்தைய அரசாங்கத்தின் கீழ், 2021இல் தலிபானால் கையகப்படுத்தப்பட்ட பின்னர், "டிரிபிள்ஸ்" என்று அழைக்கப்படும் சிறப்புப் பிரிவுகளுடன் பணியாற்றிய சுமார் 2,000 ஆப்கானியர்கள் இங்கிலாந்துக்கு இடம்பெயர்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டது.
இது தொடர்பில் இங்கிலாந்தின் ஆயுதப்படை லூக் பொல்லார்ட் கூறுகையில்,
ஆப்கானிஸ்தான் வீரர்களில் சிலர் இங்கிலாந்து அரசாங்கத்தால் நேரடியாகப் பணம் பெற்றுள்ளனர் என சாடப்பட்டு ஆதாரங்கள் கண்டறியப்பட்டன. இந்த ஆதாரம் ஆரம்ப மீள்குடியேற்ற விண்ணப்பங்களின் போது கவனிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.
சரியான ஆவணங்களைக் கண்டறிவதில் முந்தைய அரசாங்கம் தவறிழைத்துவிட்டது என்றும் சாடினார்.
6 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
7 hours ago