2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஆப்பிரிக்காவை அச்சுறுத்தும் சீனாவின் தீய திட்டங்கள்

Freelancer   / 2022 நவம்பர் 16 , பி.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்பிரிக்காவில் அதிக நேரத்தையும் பணத்தையும் சீனா முதலீடு செய்கின்ற போதும், ஆப்பிரிக்க நாடுகளின் இறையாண்மையை பெரும் ஆபத்தில் ஆழ்த்தும் தீய நீண்ட கால திட்டங்களுடன் இவை செய்யப்படுகின்றன என்று புலனாய்வு ஊடக இதழியல் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2012ஆம் ஆண்டு முதல், பெல்ட் அண்ட் ரோட் முன்முயற்சியில் பணி புரிவதற்காக 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட சீனத் தொழிலாளர்கள் ஆப்பிரிக்காவுக்கு குடிபெயர்ந்துள்ள நிலையில், 1 மில்லியனுக்கும் அதிக சீனக் குடியேறிகள் அங்கு உள்ளனர்.

மேலும், ஆப்பிரிக்காவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சீன நிறுவனங்களும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களும் உள்ளன.

குறிப்பாக, சீனாவின் வெளிநாட்டு பொலிஸ் நிலையங்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள சட்ட நிறுவனங்கள் தொடர்பான புலனாய்வு ஊடக இதழியலின் முந்தைய அறிக்கைகளில் ஒன்று உலகின் கவனத்தை ஈர்த்ததுடன், அமெரிக்கா, அயர்லாந்து மற்றும் கனடா போன்ற பல நாடுகள், பொலிஸ் நிலையங்கள் குறித்து விசாரிக்கத் தொடங்கின.

நைஜீரியா, லெசோதோ மற்றும் தான்சானியா உள்ளிட்ட பல ஆப்பிரிக்க நாடுகள் சீன நடவடிக்கைகளின் கீழ் வந்துள்ள நிலையில், லெசோதோ மற்றும் நைஜீரியாவில் உள்ள பொலிஸ் நிலையங்களில் ஃபுஷோவு பொலிஸாரும் தான்சானியாவில் குய்ங்ரியான் பொலிஸாரும் செயற்படுகின்றனர்.

தாய்வான் மற்றும் ஏனைய நாடுகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பதே இந்த நிலையங்களின் முக்கிய நோக்கங்களில் ஒன்று என்று தெற்காசிய ஆய்வாளரான ஹ்வா-யங்கை மேற்கோள் காட்டி குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டது.

இது தவிர, சட்டவிரோதமாக வர்த்தகம் செய்யப்படும் வனவிலங்கு பொருட்கள் மற்றும் ஆப்பிரிக்க மூலப்பொருட்களை துறைமுகங்களுக்கு கடத்துவது போன்ற சரக்குகளின் நடமாட்டத்தையும் ஃபுஷோவு மற்றும் குய்ங்ரியான் பொலிஸ் நிலையங்கள் கண்காணிக்கின்றன.

40 ஆபிரிக்க நாடுகளில் கிட்டத்தட்ட 200 அரச கட்டடங்கள் சீனாவால் கட்டப்பட்டுள்ளன என்று ஹெரிடேஜ் அறக்கட்டளையை மேற்கோள் காட்டி குறித்த ஊடகம் அறிக்கையிட்டுள்ளது.

14 நாடுகளுக்கு முக்கியமான உள்ளக அரசாங்க தகவல் தொடர்பு வலையமைப்பை  சீனா  உருவாக்கியுள்ளதுடன், ஆபிரிக்க கண்டத்தின் 4ஜி வலையமைப்புகளில் 70% ஐ உருவாக்கியுள்ளது மற்றும் எத்தியோப்பியாவில் உள்ள ஆப்பிரிக்க யூனியன் தலைமையகத்திற்கு முழு நிதியுதவி அளித்துள்ளது.

ஆப்பிரிக்காவுக்கு தேவையான நிதியுதவியை சீனா வழங்கினாலும் அபிவிருத்தி பார்வையில் இது ஆப்பிரிக்காவுக்கு உதவியாக இருக்கலாம். 

எனினும், இந்த நிதியுடன் தொடர்புடைய சீனாவின் நீண்டகால தீய திட்டங்கள் ஆப்பிரிக்காவின் இறையாண்மையை பெரும் ஆபத்தில் தள்ளுவதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X