Editorial / 2019 ஜூன் 10 , மு.ப. 09:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய ரீதியிலான “சிவில் ஒத்துழையாமை” பிரசாரமொன்றை அறிவித்துள்ள சூடானிய பிரதான ஆர்ப்பாடக் குழுவான சூடானிய தொழில் நெறிஞர்கள் சங்கம், சிவிலியன் அரசாங்கமொன்றுக்கு அதிகாரத்தை அந்நாட்டின் ஆளும் ஜெனரல்கள் கையளிக்கும் வரை குறித்த சிவில் ஒத்துழையாமை தொடரும் எனத் தெரிவித்துள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது அடக்குமுறை பிரயோகிக்கப்பட்டு குறைந்தது 113 பேர், சூடானியத் தலைநகர் கார்டூமில் இறந்த சில நாட்களிலேயே, சூடானின் முன்னாள் ஜனாதிபதி ஓமர் அல்-பஷிர்க்கெதிராக முதன்முறையாக ஆர்ப்பாட்டங்களை ஆரம்பித்த சூடானிய தொழில் நெறிஞர்கள் சங்கம் குறித்த அழைப்பை விடுத்துள்ளது.
சிவில் ஒத்துழையாமை நேற்று (09) ஆரம்பிக்குமெனவும், அரச தொலைக்காட்சியில் அதிகாரத்தில் இருப்பதாக சிவிலியன் அரசாங்கமொன்று அறிவிக்கும்போதே முடிவுறும் என அறிக்கையொன்றில் சூடானிய தொழில் நெறிஞர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறெனினும், வீதிகளில் எவ்வாறு குறித்த பிரசாரம் இடம்பெறும் என்பது தெளிவில்லாமல் உள்ளது. ஏனெனில் கார்டூமில் அனைத்து முக்கிய வீதிகளும், சதுக்கங்களும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அடக்குமுறைக்குப் பின்னர் வெறுமையாக்கப்பட்டுள்ளன.
இராணுவ வளாகத்துக்கு வெளியே வாரக் கணக்காகத் தொடர்ந்த ஆர்ப்பாட்ட இருப்பின் மீதான இராணுவச் சீருடை தரித்த நபர்களின் உள்நுழைவால் குறைந்தது 113 பேர் இறந்ததாக ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு நெருக்கமான வைத்தியர்கள் தெரிவிக்கையில், 61 பேர் இறந்ததாக சுகாதார அமைச்சு கூறுவதுடன், 52 பேர் கார்டூமில் துப்பாக்கிப் பிரயோகத்தால் உயிரிழந்ததாகக் கூறியுள்ளது.
கார்டூமுக்கு எதியோப்பியப் பிரதமர் அபி அஹ்மட் விஜயம் செய்து, சூடானின் இடைக்கால அரசாங்கம் தொடர்பாக ஜெனரல்களுக்கும், ஆர்ப்பாட்டத் தலைவர்களுக்குமிடையிலான பேச்சுக்களை மீள ஆரம்பிக்க முயன்ற மறு நாளான நேற்று முன்தினமே “சிவில் ஒத்துழையாமை”-க்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
பிரதமர் அபி அஹ்மட்டைச் சந்தித்த எதிரணிப் பிரதிநிதித்துவத்தும் மூன்று உறுப்பினர்கள் பின்னர் கைது செய்யப்பட்டதாக அவர்களின் உதவியாளர்கள் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தனர்
19 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
51 minute ago
1 hours ago