Editorial / 2019 ஜனவரி 11 , மு.ப. 01:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியாவிலுள்ள தூதரகங்கள், துணைத் தூதரகங்கள் ஆகியவற்றுக்கு, சந்தேகத்துக்கிடமான பொதிகளை அனுப்பினார் என்ற சந்தேகத்தின் பேரில், ஒருவரைக் கைதுசெய்துள்ளதாக, அந்நாட்டுப் பொலிஸார் நேற்று (10) அறிவித்தனர். குறித்த பொதிகளுக்குள் என்ன அனுப்பப்பட்டது என்பது இன்னமும் வெளிப்படுத்தப்படாத போதிலும், புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய அஸ்பெட்டோஸ் துகள்கள் என, சில தகவல் மூலங்கள் தெரிவித்தன.
சந்தேகத்துக்கிடமான பொதிகள் குறித்த தகவல்கள், நேற்று முன்தினம் வெளியாகியிருந்த நிலையில், விக்டோரியா மாநிலத்தின் கிராமப் பகுதியைச் சேர்ந்த தனது வீட்டிலிருந்து, குறித்த நபர், நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டார் என, பொலிஸார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, மெல்பேண் நீதிமன்றமொன்றில், குறித்த நபர் ஆஜர்படுத்தப்பட்டார்.
பொலிஸாரின் தகவலின்படி, சவாஸ் அவன் என்ற 49 வயதான குறித்த நபர், மெல்பேண், கன்பெரா, சிட்னி ஆகிய இடங்களிலுள்ள தூதரகங்கள், துணைத் தூதரகங்கள் என, 38 இடங்களுக்கு, “ஆபத்தான” பதார்த்தங்களைக் கொண்ட பொதிகளை அனுப்பியுள்ளார்.
சில ஊடகங்கள், குறித்த பதார்த்தத்தை அஸ்பெட்டோஸ் என்று அடையாளங்காட்டிய போதிலும், அதை ஏற்றுக்கொள்ளவோ மறுக்கவோ, பொலிஸார் மறுத்துவிட்டனர்.
அதேபோன், சவாஸின் நடவடிக்கைகளுக்கான நோக்கம் என்னவென்பது குறித்து, பொலிஸார் இதுவரை தெரிவிக்கவில்லை.
அவருக்குப் பிணை மறுக்கப்பட்டு, பிணையின்றி தடுப்பு உத்தரவிடப்பட்டதோடு, மார்ச் மாத ஆரம்பத்தில், மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
11 minute ago
18 minute ago
2 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
18 minute ago
2 hours ago
05 Nov 2025