2025 ஜூலை 14, திங்கட்கிழமை

இ-சிகரட்டுக்குத் தடை

Ilango Bharathy   / 2023 மே 04 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு, இ-சிகரட்களுக்குத் தடை விதிக்கப்போவதாக அவுஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.

புகை பழக்கத்திலிருந்து மக்களை விடுவிக்கும் என விளம்பரப்படுத்தப்பட்ட இ-சிகரட்களில் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள், புற்றுநோய், சுவாசக்கோளாறு போன்ற பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும், இ-சிகரட் பயன்படுத்துவோர் நாளடைவில் புகை பழக்கத்திற்கும் அடிமையாக வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அவுஸ்திரேலியாவில், பதின் பருவத்தினர் அதிலும் குறிப்பாக பாடசாலை மாணவர்களிடையே இ-சிகரட் புகைக்கும் பழக்கம் அதிகரித்ததும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து இ-சிகரட்களுக்குத் தடை விதிக்கப்போவதாக அவுஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .