2025 நவம்பர் 05, புதன்கிழமை

இணக்கமில்லாமல் ஐ. அமெரிக்க, தலிபான் பேச்சுக்கள் முடிவடைந்தன

Editorial   / 2019 மார்ச் 14 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாட்டுப் படைகள் எப்போது வெளியேறுவது என்ற இணக்கமில்லாமல், தமது நீண்ட சுற்றுப் பேச்சுவார்த்தைகளை ஐக்கிய அமெரிக்க, தலிபான் பேரம்பேசுநர்கள், நேற்று முன்தினம் முடிவுக்கு கொண்டு வந்ததாகவும் ஆனால் முன்னேற்றங்கள் இடம்பெற்றதாகவும் இரண்டு தரப்பு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல்களை நடாத்துவதற்கு, ஆப்கானிஸ்தானைப் பயன்படுத்துவதற்கு, ஆயுததாரிகள் குழுவை தலிபான் அனுமதிக்காது என்ற உறுதிமொழியை எதிர்பார்த்த குறித்த 16 நாட்கள் நீடித்த பேச்சுக்கள், இம்மாத இறுதியில் மீண்டும் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டாரின் தலைநகர் டோஹாவில் இடம்பெற்ற குறித்த பேச்சுக்களில், தலிபானின் அரசியல் தலைவர் முல்லா அப்துல் கானி பராடார் கலந்துகொண்டுருந்ததுடன், ஐக்கிய அமெரிக்க அணிக்கு சிறப்பு தூதுவர் ஸல்மே காலில்ஸாட் தலைமை தாங்கியிருந்தார்.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்த ஸல்மே காலில்ஸாட், பயங்கரவாத்துக்கெதிரான உறுதிமொழிகளிலும், ஆப்கானிஸ்தானிலிருந்து படைகளை வாபஸ் பெறுவதிலுமான கலந்துரையாடல்களில், இரண்டு தரப்புகளும் முன்னேற்றங்களைக் கண்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

ஸல்மே காலில்ஸாட்டால் தலைமை தாங்கப்படும் ஐக்கிய அமெரிக்க அணியுடன் பல சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகளை தலிபான் நடத்தியுள்ளபோதும், ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்த இதுவரையிலும் மறுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வெளிநாட்டுப் படைகளை வாபஸ் வாங்குவது, ஆப்கானிஸ்தானிலிருந்து ஏனைய நாடுகள் மீதான எதிர்காலத் தாக்குதல்களைத் தடுப்பது போன்ற பிரச்சினைகளில் இரண்டு தரப்புகளும் முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாக தலிபானின் பேச்சாளர் ஸபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X