2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இணையக் குற்றங்கள்: சீனாவில் 1 இலட்சம் பேர் கைது

Freelancer   / 2022 ஜனவரி 18 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

62,000 க்கும் மேற்பட்ட இணையம் தொடர்பான குற்றங்களுடன் தொடர்புடைய 103,000 சந்தேக நபர்களை சீனா கைது செய்துள்ளது என்று ஷின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டில் இணையக் குற்றங்கள் மீதான கடுமையான நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று பொது பாதுகாப்பு அமைச்சு, வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையின் போது, ஒட்டுக்கேட்கும் அல்லது கண்காணிப்பு உபகரணங்களை இரகசியமாக பொருத்தியமைக்காக 783 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்து தடுத்துவைத்துள்ளனர்.

பதிவுகளை பணம் செலுத்தி நீக்குதல் மற்றும் ஒன்லைன் மதிப்பாய்வுகளுக்கான புள்ளிவிவரங்களைப் பொய்யாக்குதல் போன்ற சட்டவிரோத மற்றும் குற்றச் செயல்களுக்காக 2,000 க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக ஷின்ஹுவா தெரிவித்துள்ளது.

6.2 மில்லியனுக்கும் அதிகமான ஒன்லைனில் பணம் செலுத்திய பதிவுக் கணக்குகள் மற்றும் 1,200 க்கும் மேற்பட்ட இணையதளங்கள் சட்டங்களுக்கமைய மூடப்பட்டன.

இணையத்தைப் பயன்படுத்தி பரீட்சைகளில் மோசடி செய்ததற்காக 1,700 க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X