Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Editorial / 2023 மே 11 , பி.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
இத்தாலியின் மிலன் நகரில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஏற்றிச் சென்ற லாரி பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் அருகிலிருந்த ஏராளமான கார்கள் தீக்கிரையாகின. இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ வடக்கு இத்தாலியின் மிலன் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள போர்டா ரோமானா பகுதியின் பையர் லோம்பார்டோ சாலையில் முதலில் ஒரு வாகனம் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அதனைத் தொடர்ந்து அருகே இருந்த வாகனங்களிலும் தீ பரவி பெரும் விபத்து ஏற்பட்டது.
இதனால் ஏற்பட்ட பலத்த சத்தத்தால் மிலன் நகரமே அதிர்ந்தது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். 5 க்கும் மேற்பட்ட கார்கள் சேதமடைந்துள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
8 hours ago