Editorial / 2018 மே 07 , பி.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில், வன்புணரப்பட்டதன் பின்னர் மண்ணெண்ணை ஊற்றி உயிருடன் கொழுத்தப்பட்ட 17 வயதான சிறுமியொருவர் தனது உயிருக்காக இன்று போராடி வருகிறார்.
பாலியல் குற்றங்கள் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், குறிப்பிட்ட நாள்களுக்குள் இடம்பெற்ற இவ்வாறான இரண்டாவது சம்பவம் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.
16 வயதான சிறுமி வன்புணரப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்டு இறந்த அதே கிழக்கு மாநிலமான ஜார்க்கன்டில் அதே நாளிலேயே குறித்த சிறுமியும் தாக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கருத்துத் தெரிவித்த பகூர் மாவட்டத்தில் பொலிஸ் மேலதிகாரி ஷைலேந்திர பர்ன்வல், குறித்த சிறுமி 70 சதவீதமான தீக்காயங்களைக் கொண்டுள்ளதாகவும் அவர் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பொன்று இருப்பதாகக் கூறியுள்ளார்.
இச்சந்தர்ப்பத்தில், குறித்த சிறுமி வசிக்குமிடத்திலிருந்க்கும் 19 வயதான நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சிறுமி மீது மண்ணெண்ணெண்ணையை ஊற்றிய குறித்த நபர் சிறுமியை பற்ற வைத்தததாக ஷைலேந்திர பர்ன்வல் தெரிவித்துள்ளார்.
முதலாவது சம்பவம் இடம்பெற்ற கடந்த வெள்ளிக்கிழமையே இச்சம்பவமும் இடம்பெற்றுள்ள நிலையில், முதலாவது சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் உட்பட 15 பேர் கைதாகியுள்ளனர்.
35 minute ago
56 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
56 minute ago
9 hours ago