2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இந்தியாவும் ஜப்பானும் இலங்கைக்கு இணைந்து உதவி

Freelancer   / 2022 மே 28 , மு.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொருளாதார ரீதியில் கடுமையான நெருக்கடிக்குக் முகங்கொடுத்துக்கொண்டிருக்கும் இலங்கைக்கு இணைந்து உதவி செய்வதற்கு இந்தியாவும் ஜப்பானும் இணக்கம் தெரிவித்துள்ளன என த ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜப்பான் டோக்கியோவில், நடைபெற்ற குவாட் உச்சி மாநாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி செய்திருந்தார். அந்த மாநாட்டுக்கு புறம்பாக, ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவை, மே.24 ஆம் திகதியன்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அந்த சந்திப்பின் போதே, இணைந்து உதவுவதற்கு இருநாடுகளின் பிரதமர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இந்த சந்திப்பு தொடர்பில் அறிக்கையொன்றை விடுத்திருந்த  ஜப்பானின் வெளிவிவகார அமைச்சு, இலங்கையின் நிலைமை குறித்து இரண்டு தலைவர்களும் விவாதித்திருந்தனர் என  குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் நாட்டில் மனிதாபிமான நிலைமை மோசமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு இரண்டு நாடுகளும் ஒத்துழைப்புடன் செயற்பட இரண்டு தலைவர்களும் உடன்பட்டதாகவும்   தெரிவித்துள்ளது.

ஜப்பான் இலங்கைக்கு, சிறந்த நன்கொடையாளர்கள் மற்றும் மேம்பாட்டு பங்காளராக அரை நூற்றாண்டுக்கும் மேலாக செயற்பட்டு வருகிறது. 

 அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய குவாட் உறுப்பினர்கள் வெளிநாட்டு உதவிக் கூட்டமைப்பை அமைப்பதில் முன்னணி வகிக்க வேண்டுமென இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்து இருந்தார்.

இந்நிலையில், இலங்கைக்கு உதவ இந்தியாவுடன் இணைந்து ஜப்பான் வெளியிட்ட அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து சுமார் 3.5 பில்லியன் டொலர்களை இலங்கைக்கு இந்தியா வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .