அண்மைக்காலமாக சுவிட்ஸர்லாந்தில் எரிவாயு தட்டுப்பாடு அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் குளிர்காலத்தை சமாளிக்க நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் எரிவாயு குறித்த விதிமுறைகளை மீறும் நபர்களுக்கு சிறை தண்டனை விதிக்க சுவிட்ஸர்லாந்து அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி விதிமுறைகளை மீறும் நபர்களுக்கு மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை அல்லது அபராதங்கள் விதிக்கப்படலாம் என்று கூறப்பட்டிருக்கிறது.
புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் விதிமுறைகளின் படி, எரிவாயு மூலமாக கட்டிடங்களை வெப்பமாக்கும் வசதியுடைய பகுதிகளில் அதிகமாக 19 பாகை செல்சியஸ் வரை வெப்பப்படுத்திக் கொள்ளலாம்.
அதற்கு மேல் பயன்படுத்தக் கூடாது. மேலும் நீரை 60 பாகை செல்சியஸ் வரை வெப்பப்படுத்திக் கொள்ளலாம். இந்த விதிமுறைகளை மீறி நடக்கும் மக்கள், 30 சுவிஸ் பிராங்குகளிலிருந்து, 3000 சுவிஸ் பிராங்குகள் வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்று பெடரல் நீதித்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.