2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இப்படியும் ஒரு போட்டியா ?

Ilango Bharathy   / 2022 ஜூன் 28 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
அமெரிக்காவில், கலிபோர்னியாவில் உலகிலேயே மிகவும் அவலட்சணமான நாய்களுக்கான போட்டியொன்று அண்மையில் நடைபெற்றுள்ளது. 
 
இப்போட்டியில் மிஸ்டர் ஹேப்பி ஃபேஸ் என்னும் நாய் முதலிடத்தை பிடித்துள்ளதோடு, அதன் உரிமையாளருக்கு 1500 டொலர்கள் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டுள்ளது.
கருமை நிறம் கொண்ட குறித்த நாயானது முடி இல்லாமல், வளைந்து போன தலையுடன் உடல் முழுவது பருக்கள் கொண்டு காணப்படுவதால் நடுவர்கள் மற்றும் பார்வையாளர்களின் கவனத்தை பெற்று அதிகப்படியான ஆதரவுடன் முதலிடம் பிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் இது குறித்து அந்நாயின் உரிமையாளரான ஜெனெடா பெனாலி கருத்துத் தெரிவிக்கையில் ”தன் நாயை தான் எப்போதும்அவலட்சணமான நாயாகக் கருதவில்லை என்றும், அதனை அதிக அன்புடன் தான் வளர்த்து வந்ததாகவும் மகிழ்வுடன் தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் குறித்த நாயின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .