2025 நவம்பர் 05, புதன்கிழமை

’இரண்டாவது உறுப்பினரும் இராஜினாமா ட்ரூடோக்கு நெருக்கடி அதிகரிக்கிறது’

Editorial   / 2019 மார்ச் 06 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையின் இரண்டாவது உறுப்பினரான ஜேன் பில்பொட், நேற்று முன்தினம் இராஜினாமா செய்துள்ளார். இது பிரதமர் ட்ரூடோவுக்கு பாரியதொரு அடியாக நோக்கப்படுகின்றது.

அதிகரித்துவரும் அரசியல் பிரச்சினையான எஸ்.என்.சி லவலின் குழும நிறுவனம் மோசடி வழக்கைத் தடுப்பதற்கு, முறையற்ற விதத்தில் முன்னாள் நீதி அமைச்சர் ஜோடி வில்சன் றேபோல்டுக்கு அதிகாரிகள் அழுத்தம் வழங்கினர் என்தை அரசாங்கம் எவ்வாறு கையாள்கிறது என்பதில் தான் நம்பிக்கை இழந்துள்ளதாக, அண்மையிலேயே திறைசேரிப் பணிப்பாளர் சபையின் தலைவராக நியமிக்கப்பட்ட ஜேன் பில்பொட் தெரிவித்துள்ளார்.

இதுதவிர, குறித்த குற்றச்சாட்டுக்கு எவ்வாறு அரசாங்கம் பதிலளித்தது என்பது தொடர்பிலும் தனது மகிழ்ச்சியின்மையை அறிக்கையொன்றில் ஜேன் பில்பொட் வெளிப்படுத்தியுள்ளார். ஜேன் பில்பிட்டின் நெருங்கிய நண்பியான ஜோடி வில்சன் றேபோல்ட், எதிர்பாரதவிதமாக இவ்வாண்டு ஜனவரியில் பதவியிறக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் 12ஆம் திகதி இராஜினாமா செய்திருந்தார்.

பிரதமர் ட்ரூடோ தோல்வியடைவார் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்ற இன்னும் சில மாதங்களில் இடம்பெறுவதற்கு முன்பாக, அரசாங்கத்தின் செலவளிப்புக்கு பொறுப்பான ஜேன் பில்பொட் இராஜினாமா செய்வதன் மூலம் அமைச்சரவையிலுள்ள பலம் வாய்ந்த இன்னொரு பெண் உறுப்பினரை பிரதமர் ட்ரூடோ இழந்துள்ளார்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X