2026 மே 09, சனிக்கிழமை

இரண்டு வருடங்களுக்கு வீடுகள் வாங்கத் தடை விதிப்பு

Ilango Bharathy   / 2022 ஏப்ரல் 10 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனடாவில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், 2 வருடங்களுக்கு வீடுகள் வாங்கத் தடை விதிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடுகளின்  விலை உயர்வால் ஏற்படும் பிரச்சனையைக் குறைக்கும் விதமாகவே கனடா அரசு இத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் கனடாவில் 2 வருடங்களுக்கு வெளிநாட்டவர்கள் வீடு வாங்குவதற்குத்  தடைவிதிக்கப்படவுள்ளதுடன், தங்கள் வீட்டை ஓராண்டுக்குள் விற்பவர்களுக்கு அதிக வரி விதிக்கப்படவுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் வெளிநாட்டு மாணவர்களுக்கும், நிரந்தர உரிமம் பெற்றவர்களுக்கும் பல விதிவிலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .