Ilango Bharathy / 2022 மார்ச் 08 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிரியாவில் நேற்று முன்தினம்(06) இராணுவத்தினர் பயணித்த பஸ் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவின் ஹோம்ஸின் கிராமப்புறத்தில் உள்ள பல்மைரா நகரின் பாலைவனப் பகுதியில் பயணித்த இராணுவ பஸ் மீதே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இத் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 18 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் காயமடைந்தவர்களில் பெரும்பாலானவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
7 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago
9 hours ago