2025 நவம்பர் 05, புதன்கிழமை

’இராணுவத்தைப் பயன்படுத்தும் மோடி’

Editorial   / 2019 மே 13 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய இராணுவத்தை, தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்துகிறாரென, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ குற்றஞ்சுமத்தியுள்ளார்.

கோவையில், நேற்று முன்தினம் (11​) இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

புல்வாமா தாக்குலில் உயிரிழந்த இாணுவ வீரர்களை நினைத்துகொண்டு வாக்களிக்க செல்லுங்களென, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார் என்றும் இவ்வாறு, இராணுவத்தைப் பற்றி தேர்தல் பிரசாரத்தில் ஒருபோதும் பேசக்கூடாது என்றும் ஆனால், தேர்தல் விதிமுறைகளை மீறியே அவர் செயற்படுகின்றார் என்றும் கூறினார்.

இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையகம் அதனை நியாயப்படுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது என்றும் இவ்வாறு மோடியின் செயற்பாடுகளுக்கு எதிராக, தேர்தல் ஆணையகம் நடவடிக்கை எடுக்காமல் தவிர்ப்பது, ஜனநாயகத்துக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலாகவே கருதப்படுகின்றது என்று அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X