Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Ilango Bharathy / 2023 ஜனவரி 08 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு கானாவைச் சேர்ந்த 29 வயதான ‘சுலைமானா அப்துல் சமத்‘ உலகிலேயே உயரமான மனிதனாக அடையாளங்காணப்பட்டுள்ளார்.
ஊர் மக்களால் ‘அவுச்சி‘ என அழைக்கப்படும் இவர் 9 அடி 6 அங்குலம் (2.89 மீற்றர்) உயரம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர் இவ்வாறு உயரமாக இருப்பதற்கு மார்ஃபன் சிண்ட்ரோம் என்ற மரபணு கோளாரே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அவரது உடல் பாகங்களின் வளர்ச்சி தடைப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அவரது மூளையில் ஒரு அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் இதனை குணப்படுத்த முடியும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அவரின் அறுவை சிகிச்சைக்கு தேவையான பணத்திற்கு கானாவின் பொது மருத்துவ காப்பீடு துறையால் அனுமதி வழங்க முடியாத சூழலில், அடிப்படை சிகிச்சைகளை மட்டுமே எடுத்து வருகிறார்.
இந்நிலையில் வீட்டில் இருந்தவாறே தொலைபேசி ரீசார்ஜ் செய்யும் பணியில் அவர் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவுச்சியைக்காண்பதற்காக தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வருகை தருவதாகவும் இதனால் அப்பகுதியில் பிரபலமான ஒருவராக அவர் வலம் வருகின்றார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அவுச்சி கூறும் போது, "அல்லா என்னை இப்படி இருக்கவே படைத்துள்ளார். அதனால் உயரமாக இருப்பதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை, எனத் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
5 hours ago
9 hours ago