2026 மார்ச் 23, திங்கட்கிழமை

இஸ்ரேலில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: 160 பேர் காயம்

S.Renuka   / 2026 மார்ச் 23 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்​கா, இஸ்​ரேல் - ஈரான் இடையி​லான போர் 4ஆவது வாரத்தை எட்​டி​யுள்​ளது. இந்​நிலை​யில், இஸ்​ரேலின் தெற்குப் பகு​தி​யில் உள்ள டிமோனா நகரில் பெரிய அளவி​லான நெருப்​புக் கோளங்​கள் விழுந்து வெடிக்​கும் காட்​சிகள் வெளியாகியுள்​ளன.

அணுசக்தி மையம் அமைந்​துள்ள இந்​தப் பகு​தி​யில், முதல் முறையாக இஸ்​ரேலின் வான் பாது​காப்பு அமைப்​பு​களை மீறி ஈரானிய ஏவு​கணை​கள் ஊடுரு​வித் தாக்​கி​யுள்​ளன. ஈரானின் பழைய ஏவு​கணை​களிட​மிருந்து அணுசக்தி நகரைக் காக்​கத் தவறியதை இஸ்​ரேலிய ராணுவம் ஒப்​புக்​கொண்​டுள்​ளது. ஈரானின் பிர​தான அணுசக்தி செறிவூட்​டல் தளமான நடான்ஸ் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்ட அதே நாளில், அதற்​குப் பதிலடி​யாக இஸ்​ரேல் மீது இந்​தத் தாக்​குதல்​கள் நடத்​தப்​பட்​டுள்​ளன.


இஸ்​ரேலின் தெற்கு நகரங்​களான டிமோனா மற்​றும் ஆராத் பகுதிகளில் ஈரான் நடத்​திய தாக்​குதலில் 160-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​துள்​ள​தாக மருத்​து​வக் குழு​வினர் தெரி​வித்​துள்​ளனர். குறைந்​தது 2 கண்​டம் விட்டு கண்​டம் பாயும் ஏவு​கணை​களைத் தடுக்க இஸ்​ரேலிய வான் பாது​காப்​புத் துறை தவறி​யுள்​ளது.

அணுசக்தி மையத்​துக்கு அரு​கிலுள்ள வான் பாது​காப்பை ஈரானிய ஏவு​கணை​கள் ஊடுரு​விய முதல் சம்​பவம் இது​வாகும். சமூக வலை​தளங்​களில் பகிரப்​பட்ட வீடியோக்​களில், ஏவுகணைகள் இஸ்​ரேலிய இலக்​கு​களைத் தாக்​கும்​போது பெரிய அளவி​லான வெடிப்​பு​கள் ஏற்​படு​வது பதி​வாகி​யுள்​ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .