Editorial / 2018 மே 31 , மு.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

காஸா நிலப்பரப்பிலிருந்து மோட்டார் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டமைக்குப் பதிலடியாக, ஹமாஸ் ஆயுதக்குழுவின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக, இஸ்ரேல் நேற்று (30) தெரிவித்தது. இரு தரப்புகளுக்குமிடையில், 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற போரைத் தொடர்ந்து, மோசமான பதற்றமொன்றை இது ஏற்படுத்தியுள்ளது.
இரு தரப்புகளும் மாறி மாறி மேற்கொண்ட இத்தாக்குதல், 2008ஆம் ஆண்டுக்குப் பின்னர், 4ஆவது போரொன்றை ஏற்படுத்தும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.
24 மணிநேர காலப்பகுதியில், காஸா நிலப்பரப்பில் காணப்பட்ட, 60க்கும் மேற்பட்ட இராணுவ இலக்குகளை இலக்குவைத்ததாக, இஸ்ரேல் தெரிவித்தது. அத்தோடு, தமது நிலப்பகுதிக்குள், 70க்கும் மேற்பட்ட றொக்கெட்டுகளும் மோட்டார் குண்டுகளும், செவ்வாய்க்கிழமை வீசப்பட்டன எனவும் குறிப்பிட்டது.
தமது பகுதி மீதான தாக்குதல்களால், மூன்று படையினர் காயமடைந்தனர் என, இஸ்ரேல் தெரிவித்தது. காஸா நிலப்பரப்பில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களால் ஏற்பட்ட சேத விவரங்கள் தெரியவரவில்லை.
ஆனால், நேற்று முன்தினம் இரவு கருத்துத் தெரிவித்த ஹமாஸ் அதிகாரியொருவர், இரு தரப்புகளுக்குமிடையில் மோதல் நிறுத்தத்துக்குச் சம்மதம் ஏற்பட்டுள்ளது என்றார். அதன் பின்னர், நேற்றுக் கருத்துத் தெரிவித்த ஹமாஸ் உயரதிகாரியொருவரும், மோதல் நிறுத்தம் தொடர்பாகக் குறிப்பிட்டிருந்தார்.
எனினும், இவ்விடயம் தொடர்பாக, இஸ்ரேலிய இராணுவத்தால் கருத்தேதும் வெளிப்படுத்தப்படாத போதிலும், இஸ்ரேலிய புலனாய்வுத்துறை அமைச்சர் யிஸ்ரேல் கற்ஸ், இவ்வாறான மோதல் நிறுத்தத்தை நிராகரித்தார்.
15 minute ago
36 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
36 minute ago
9 hours ago