Freelancer / 2023 நவம்பர் 21 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே தொடர்ச்சியாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை ஆதரவு தெரிவித்து இருக்கிறது. செங்கடல் பகுதிக்கு இஸ்ரேலிய கப்பல்கள் மற்றும் அந் நாட்டு கொடிகளுடன் வரும் கப்பல்களை கடத்துவோம் என அவர்கள் எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.
இந் நிலையில், துருக்கியில் இருந்து கேலக்சி லீடர் என்ற சரக்கு கப்பல் இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்தது. இதில் இஸ்ரேலியர்கள் உள்பட பல்வேறு நாட்டை சேர்ந்த 52 பணியாளர்கள் பயணம் செய்தனர். இந்த கப்பல் ஏமன் அருகே தெற்கு செங்கடல் பகுதிக்கு வந்த போது திடீரென மாயமானது.
அந்த சரக்கு கப்பலை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடத்தி சென்று விட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் கப்பல் கடத்தப்பட்ட சம்பவத்துக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கண்டனம் தெரிவித்து இருந்தார்.
இதனிடையே, இஸ்ரேலின் கப்பல்கள் எங்களின் “நியாயமான இலக்கு. அது எங்கிருந்தாலும், நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம்” என்று ஹவுதி அமைப்பின் ராணுவ அதிகாரி தெரிவித்து இருக்கிறார்.
தற்போது கடத்தப்பட்டு இருக்கும் கேலக்ஸி லீடர் என்ற சரக்கு கப்பல் பிரிட்டனில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதனை ஜப்பானை சேர்ந்த நிறுவனம் இயக்கி வருகிறது. எனினும், இதில் இஸ்ரேலை சேர்ந்த வியாபாரிக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago