Mayu / 2024 மார்ச் 08 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு இஸ்ரேலின் மார்காலியோட் பகுதியில் ஒரு விவசாய நிலப் பகுதியில், கடந்த திங்கட்கிழமை நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் இந்திய இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். அவர், கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த பாட்நிபின் மேக்ஸ்வெல் என விசாரணையில் தெரியவந்தது.
இஸ்ரேல் இராணுவம், எகிப்து எல்லையையொட்டி அமைந்துள்ள ராஃபாவிலும் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திவருகிறது. பணயக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவிக்காவிட்டால், ரமலான் மாதம் தொடங்குவதற்குள் ராஃபா நகரில் தரைவழித் தாக்குதல் நடத்தப்படலாம் என தெரிகிறது.
பாட்நிபின் மேக்ஸ்வெல், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர்தான் ஒப்பந்தத்தின்பேரில் இஸ்ரேலுக்குச் சென்று பண்ணையில் வேலை செய்துகொண்டிருந்தார்.
அவருக்கு 5 வயதில் மகள் ஒருவர் இருக்கும் நிலையில், அவருடைய மனைவி தற்போது 7 மாத கர்ப்பிணியாகவும் உள்ளார். இந்தச் சூழலில் அவர் ஏவுகணை தாக்குதலுக்கு ஆளாகியிருப்பது அவருடைய குடும்பத்தை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
17 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago